உக்ரைனுக்கு 100 மில்லியன் வழங்கும் கத்தார்!
#world_news
#Ukraine
#Lanka4
Dhushanthini K
2 years ago

உக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை கத்தார் வழங்குவதாக அறிவித்துள்ளது.
சுகாதாரம், கல்வி மற்றும் கண்ணிவெடி அகற்றலுக்காக இந்த உதவி தொகை வழங்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கத்தார் பிரதமருடனான கலந்துரையாடலுக்கு பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதேவேளை உக்ரைனிய ஜனாதிபதியின் தலைமை அதிகாரி கருங்கடலில் பொதுமக்கள் கப்பல்களை ரஷ்யா அச்சுறுத்துவதாகவும் பயங்கரவாதிகளின் இத்தகைய செயல்களை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.



