ஹம்பாந்தோட்டையில் சீன கடற்படை முகாம்..?
#SriLanka
#China
#Hambantota
Prathees
2 years ago
சீனாவின் கடற்படைத் தளத்தை நடத்துவதற்கு மலிவு விலை நாடுகளில் இலங்கை முன்னணியில் இருப்பதாக பேங்காக் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள வில்லியம் மற்றும் மேரி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள்காட்டி இந்த செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் 2.19 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுக்கு இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சிறந்த இடமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதற்றம் காரணமாக அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய முதலீட்டை சீனா மேற்கொண்டுள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்தும் திறனை சீனா பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.