மனநல நோயாளி உயிரிழந்த விவகாரம் : நால்வருக்கு விளக்கமறியல்!

#SriLanka #Hospital #Lanka4
Thamilini
2 years ago
மனநல நோயாளி உயிரிழந்த விவகாரம் : நால்வருக்கு விளக்கமறியல்!

அங்கொட தேசிய மனநல நிறுவகத்தில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 04 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நால்வரும்  இன்று (29.07) அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சந்தேகநபர்கள் வைத்தியசாலையின் சுகாதார உதவியாளர்களை தாக்கியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்ட 48 வயதான நோயாளி ஜூலை மாதம் 20ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும்  மர்மமான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளியை கட்டுப்படுத்த முற்பட்டபோது வைத்தியசாலை உதவியாளர்களினால் நோயாளி தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அவரை தாக்கிய மருத்துவமனை உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!