யாழ். தாதியர் பயிற்சிக் கல்லுாரியில் நவீன கணினி ஆய்வு கூடம் திறப்பு
#SriLanka
#Jaffna
#School
#Lanka4
#இலங்கை
#லங்கா4
#யாழ்ப்பாணம்
Mugunthan Mugunthan
2 years ago
யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சிக் கல்லுாரிக்கு இணைய வசதியுடன் நவீன கணினி ஆய்வு கூடம் அபயம் அறக்கட்டளை அனுசரணையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தாதியர் பயிற்சிப் பாடசாலையில் கல்விபயிலும் தாதிய மாணவர்களுக்கு, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஒரு பாடமாக இருந்த போதிலும் அவர்களுக்கான கணினி ஆய்வுக்கூடம் இல்லாமல் காணப்பட்டது.
இந்நிலையை நிவர்த்தி செய்யும் முகமாக, இணைய வசதியுடன் கூடிய நவீன கணினி ஆய்வுகூடம் ஒன்று அபயம் அறக்கட்டளையின் அனுசரணையில், மாணவர்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, நிதி அனுசரணையாளர்கள், தாதிய மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.