பொலிஸ் விசேட அதிரடிப்படையில் முதல் முறையாக உளவியல் பிரிவு
#SriLanka
#Sri Lankan Army
Prathees
2 years ago
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வரலாற்றில் முதன்முறையாக உளவியல் பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
போருக்குப் பின்னரான காலப்பகுதியிலும் பொருளாதார நெருக்கடியான சூழலிலும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் மனப்பிரச்சினைகள் மற்றும் போதைப்பொருள் பிரச்சினைகளை இனங்கண்டு வேலை அழுத்தங்களை உணர்ந்து அந்த நிலைமைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில் அதிகாரிகளின் மனதை வலுப்படுத்துவதே இந்த பிரிவின் நோக்கமாகும்.
கவுன்சிலிங் சைக்காலஜி டிப்ளமோ படிப்பை படித்த 16 அதிகாரிகளும் புதிதாக தொடங்கப்பட்ட உளவியல் பிரிவில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்த அதிகாரிகளில் தலைமை ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் இருப்பதாக படை கூறுகிறது.