பாஸ்போர்ட்டுடன் போலி விசா வழங்கிய குடிவரவு அதிகாரி விளக்கமறியலில்
சுற்றுலா விசாவில் ஓமன் நாட்டில் பணிபுரிய செல்வதற்காக வந்த பெண் ஒருவர் இந்திய விசா மற்றும் விமான டிக்கெட்டை காட்டி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளை தவறாக வழிநடத்தி விமான நிலையத்திற்குள் அழைத்துச் சென்ற குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரி ஒருவரை பணியக அதிகாரிகள் கைது செய்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஒப்படைத்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 27ஆம் திகதி பிற்பகல் பல விமானங்கள் புறப்படவிருந்த மிகவும் பரபரப்பான நேரத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த குடிவரவு அதிகாரி இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பொறுப்பதிகாரியை சந்தித்து வெளிநாட்டுக்கு செல்லும் பெண்மணியை தனது தோழி என அறிமுகம் செய்து கொண்டு தான் இந்தியாவிற்கு சுற்றுலா செல்வதாக கூறி சீல் வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அதன்படி, பொறுப்பதிகாரி சீல் வைத்துள்ளதாகவும், பின்னர் அங்கிருந்த பணியக அதிகாரி ஒருவரின் பார்வை குடிவரவு அதிகாரி மற்றும் பெண் பயணி மீது கவனம் செலுத்தி அவர்கள் பின்னால் சென்று அவர்களை கைது செய்ய முடிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த இருவரையும் ஓமான் பயணிகள் கவுன்டரில் சோதனை செய்தபோது, அவர்களிடம் இந்திய விசா மற்றும் இந்திய விமான டிக்கெட், ஓமானிய சுற்றுலா விசா, ஓமன் விமான டிக்கெட் ஆகியவற்றின் அச்சிடப்பட்ட நகல் இருந்ததால் கைது செய்து குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்தனர்.
ஓமானுக்குச் செல்லும் இலங்கைப் பெண்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வீட்டு வேலைக்குச் செல்வதை நிறுத்தியுள்ள நிலையில், இந்த குடிவரவு அதிகாரி சுற்றுலாப் பயணிகளின் ஊடாக பெண்களை அங்கு அனுப்பும் கடத்தல் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த எவரேனும் ஆட்கடத்தலில் ஈடுபட்டால், நிலைமையைப் பொருட்படுத்தாது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.
சம்பந்தப்பட்ட குடிவரவு குடியகழ்வு அதிகாரி மற்றும் பெண் பயணி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, குடிவரவு குடியகல்வு அதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், சந்தேகநபர் 7,500 ரூபா ரொக்கம் மற்றும் 25,000 ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காவிந்த பியசேகரவின் பணிப்புரையின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலைய கட்டளைத் தளபதிடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.