மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு பாடசாலை மாணவர்கள் உயிரிழப்பு
மாதம்பே தம்பகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மாணவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் அதிவேகமாக வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது, இரு மாணவர்களும் பாதுகாப்பு ஹெல்மெட் அணியாமல் பள்ளி சீருடை அணிந்து மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மாணவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதுடன் மற்றைய மாணவர் சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த 16 வயதுடைய மாணவர்கள் ருவன்வெல்ல மற்றும் சிலாபம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பே பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.