கிருஷ்ணகிரி பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
#India
#Death
#fire
#Tamilnews
#Breakingnews
Mani
2 years ago

கிருஷ்ணகிரி மாவட்டம், பழையபேட்டையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பட்டாசுக் கிடங்கில் இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. குடோனில் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறின. இந்த வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒன்பதுக்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். மேலும், பட்டாசு வெடித்ததில் குடோன் அருகே மூன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்ததுடன், பல வீடுகளும் சேதமடைந்தன.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



