தந்தையின் கத்திக்குத்துக்கு இலக்கான மகன் காயம்
#SriLanka
#Police
#Crime
Prathees
2 years ago
தந்தையின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான சிறு குழந்தையொன்று சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர் பொரலுவெவ - ரத்மல்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய ஆண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று (28) இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வீட்டில் ஏற்பட்ட சண்டையின் போது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், சந்தேகநபரின் தந்தை இதுவரை கைது செய்யப்படவில்லை, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.