மகாராஷ்டிராவில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் 5 பேர் உயிரிழந்தனர் 20 பேர் காயம்
#India
#Accident
#Bus
#Tamilnews
Mani
2 years ago
மகாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். புல்தானா மாவட்டத்தில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புல்தான் மாவட்டம் மல்காபுர் நகரில் உள்ள மேம்பாலத்தில் அமர்நாத் யாத்திரையை முடித்துக் கொண்ட பக்தர்கள் பேருந்து ஹிங்கோலிக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, நாஷிக் நோக்கிச் சென்ற பேருந்து, லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, ஹிங்கோலி நோக்கிச் சென்ற பேருந்து மீது மோதியது. இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர், மொத்தம் 20 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.