தெலுங்கானாவில் கனமழை காரணமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 8 பேர் உயிரிழப்பு

#India #Death #Rain #Tamilnews #Breakingnews
Mani
2 years ago
தெலுங்கானாவில் கனமழை காரணமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 8 பேர் உயிரிழப்பு

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிவதால், வெள்ளம் ஊருக்குள் புகுந்து கரை புரண்டோடுகிறது. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

நேற்று பெய்த தொடர் மழையால் தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் கொட்டிய மழையால் அங்குள்ள ஒரு கிராமம் வெள்ளக்காடானது.

இதைத்தொடர்ந்து அந்த கிராமத்தை சேர்ந்த 12 பேர் பாதுகாப்பான இடம் தேடி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் திடீரென வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

12 பேரில் 4 பேர் மட்டுமே போராடி வெள்ளத்தில் இருந்து தப்பிக்க முடிந்தது, மீதமுள்ள 8 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!