அழிவடையும் நிலையில் உள்ள நெற்செய்கை : பாரிய நட்டம் ஏற்படும் என சுட்டிக்காட்டு!
#SriLanka
#Mahinda Amaraweera
#Lanka4
Thamilini
2 years ago
கடும் வரட்சி காரணமாக உடவலவ நீர்த்தேக்கத்தின் கீழ் பயிரிடப்பட்டிருந்த 50,000 ஏக்கருக்கும் அதிகமான நெற்செய்கை அழிவடையும் அபாயத்தில் உள்ளதாக மைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
உடவலவ நீர்த்தேக்கத்திற்கு தேவையான நீரை சமனல குளத்திலிருந்து பெற்றுக் கொள்ளாவிட்டால், நெல் மற்றும் ஏனைய பயிர்கள் சேதமடையும் எனவும் இதனால், 30 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படக்கூடும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த பிரச்சினை தொடர்பில் அமைச்சரவையுடன் கலந்துரையாடி தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதியளித்துள்ளார்.