இலங்கை வந்தடைந்த பிரான்ஸ் ஜனாதிபதி ஒரு சில மணித்தியாலங்களே தங்குவார்!

#SriLanka #Sri Lanka President #France #Meeting #President #Visit
Mayoorikka
2 years ago
இலங்கை வந்தடைந்த பிரான்ஸ் ஜனாதிபதி ஒரு சில மணித்தியாலங்களே தங்குவார்!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் அவரது குழுவினர் இன்று நள்ளிரவு இலங்கை வந்தடைந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 இலங்கை வந்த பிரான்ஸ் ஜனாதிபதியுடன் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் மற்றும் வெளிநாட்டு பிராந்தியங்களுக்கான இராஜாங்க அமைச்சர் ஆகியோர் அடங்குவர்.

 இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி கொழும்பில் சில மணித்தியாலங்கள் தங்கியிருக்க உள்ளார்.

 இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், இரு நாடுகளின் பிராந்திய மற்றும் சர்வதேச சவால்கள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் விவாதிக்கவும் வாய்ப்பு கிடைக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 இதேவேளை பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கைக்கு வருவது இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!