முல்லைத்தீவு மனித எச்சங்கள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு
#SriLanka
#Douglas Devananda
#Investigation
#Mullaitivu
Prasu
2 years ago
முல்லைத்தீவு மாவட்ட கொக்குளாய் கொக்குத் தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்பதே தன்னுடைய நிலைப்பாடாக இருக்கின்ற போதிலும், மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்படும் வகையிலான செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்திருந்தார்.
கிளிநொச்சியில் இன்றைய தினம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
மேலும், குறித்த மனித எச்சங்கள் தொடர்பாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், விஞ்ஞான ஆய்வுகளின் ஊடாக அவை எந்தக் காலப் பகுதிக்குரியவை என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.