சட்டவிரோத மணல் அகழ்வு விவகாரம் - ஒரு மாதத்துக்குள் தீர்வு காணப்பட வேண்டும் - அமைச்சர் டக்ளஸ்
#SriLanka
#Douglas Devananda
#Police
#Kilinochchi
Prasu
2 years ago
சட்டவிரோத மணல் அகழ்வு விவகாரம் ,பொலிஸாரின் சாக்குப் போக்குகளை தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருக்க முடியாது,ஒரு மாதத்துக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தியுள்ளார்!
சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக பொலிஸாரின் சாக்குப் போக்குகளையும் உறுதிமொழிகளையும் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருக்க முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஒரு மாத காலத்தினுள் உறுதியான தீர்வு காணப்பட வேண்டும் அறிவுறுத்தியுள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போதே அமைச்சரினால் கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.