22 வருடங்களுக்கு பிறகு அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி வீதம் அதிகரிப்பு

#America #Central Bank #taxes
Prasu
2 years ago
22 வருடங்களுக்கு பிறகு அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி வீதம் அதிகரிப்பு

அமெரிக்காவின் மத்திய வங்கி அதன் அடிப்படை வட்டி வீதத்தை 0.25 வீதமாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் மத்திய வங்கியானது ஒவ்வொரு காலாண்டும் அடிப்படை வட்டி வீதத்தை நிர்ணயிக்கும். அதன்படி, அமெரிக்காவின் பணவீக்கம் தற்போது 3 வீதமாக இருந்து வரும் நிலையில், அதனை 2 வீதத்தை விடவும் குறைக்கும் நோக்கில் அமெரிக்க மத்திய வங்கி பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு தொடர்ச்சியாக அமெரிக்க மத்திய வங்கியின் அடிப்படை வட்டி வீதங்களை 0.25 வீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டிற்கு பிறகு, 22 வருடங்களாக முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த வட்டி வீதம் அமைந்துள்ளது.

இந்த கால் வீத உயர்வு என்பது வங்கிகளின் கடன் வட்டி வீதத்தை 5.25 வீதத்திலிருந்து 5.5 வீதம் வரை கொண்டு செல்லும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பிலான அறிவிப்பை அமெரிக்க மத்திய வங்கி தலைவர் ஜெரோம் பவல் (Jerome Powell) வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், "வட்டி வீதங்களை நிர்ணயிக்கும் Federal Open Market Committee வழங்கிய ஆலோசனைகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது .

பொருளாதார நிலைமையையும், விலைவாசியின் ஏற்ற இறக்கங்களையும் கூர்ந்து கவனித்து வருகிறோம். பொருளாதார வளர்ச்சி சற்று குறைவடைந்திருந்தாலும் அமெரிக்க பொருளாதாரத்தில் உள்ள அடிப்படை வலிமை காரணமாக, பின்னடைவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை. " என தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வட்டி வீதம் மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. வட்டி வீத உயர்வின் விளைவாக வங்கி துறை பல பொருளாதார அழுத்தங்களை தாங்க வேண்டியுள்ளது.

 இவ்வாறான சூழ்நிலைகள் வேலைவாய்ப்பின்மை உட்பட பல சிக்கல்களை உருவாக்கும். எதிர்வரும் நாட்களில் இந்த வட்டி வீத உயர்வின் தாக்கம் அமெரிக்க பங்கு சந்தையிலும், இந்திய பங்கு சந்தையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!