வடகொரிய தலைவர் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் இடையே பேச்சுவார்த்தை

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு, வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் பிராந்திய பாதுகாப்பு மற்றும் இராணுவ விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக வடகொரியாவின் உத்தியோகபூர்வ ஊடகம் தெரிவித்துள்ளது.
1950-53 கொரியப் போர் முடிவடைந்து 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், கிம் உடனான ரஷ்ய பாதுகாப்பு அமைச்சரின் சந்திப்பு சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது.
Pyongyangகில் நடந்த சந்திப்பில் செர்ஜி மற்றும் கிம் பல விடயங்களில் பரஸ்பர உடன்பாட்டை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர். கொரிய போர் நினைவை முன்னிட்டு நடத்தப்பட்ட இராணுவ மற்றும் ஆயுத அணிவகுப்பு பேரணிக்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜியை கிம் அழைத்துச் சென்றார்.
அணி வகுப்பில் வட கொரியாவால் அண்மையில் ஏவப்பட்ட ஏவுகணைகள் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் நெருக்கமாக சென்று அவதானித்துள்ளார்.



