யாழ் ராணி புகையிர சேவையின் ஓராண்டு பூர்த்தி விழா
#SriLanka
#Lanka4
#Train
Kanimoli
2 years ago
யாழ் ராணி புகையிர சேவையின் ஓராண்டு பூர்த்தி விழா இன்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது. 
யாழ் ராணி புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டு ஒருவருடம் பூர்த்தியடைந்துள்ளதை கொண்டாடும் வகையில் குறித்த நிகழ்வு கேக்வேட்டி கொண்டாடப்பட்டது. 
இந்நிகழ்வில் கடத்தொழில் அமைச்சரும் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, கிளிநொச்சிமாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர், புகையிரத நிலைய ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு போக்குவரத்து இலகுபடுத்தலுக்காக சேவையில் ஈடுபட்ட யாழ் ராணி, தனது முழுமையான சேவையை வழங்கி வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.