பிலிப்பைன்ஸ் நாட்டில் படகு கவிழ்ந்ததில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்
#world_news
#Lanka4
#Phillipines
#விபத்து
#லங்கா4
#Boat
Mugunthan Mugunthan
2 years ago

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் அருகே உள்ள ஏரியில் சென்ற சிறிய படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அந்த படகில் பயணம் செய்தவர்களில் 40 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதில் 30 பேர் நீரில் மூழ்கியதால் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை வெளியிட்ட அறிக்கையில், ‘பரங்காய் கலினாவனில் இருந்து சுமார் 50 கெஜம் தொலைவில், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. அதிகாலை 1 மணியளவில் பலத்த காற்று வீசியதால், மோட்டார் படகு அடித்துச் செல்லப்பட்டது. இந்த விபத்தில் 30 பேர் வரை நீரில் மூழ்கி இருக்க வாய்ப்புள்ளது.
மேலும் 40 பேர் காப்பாற்றப்பட்டனர். நீரில் மூழ்கியோரை தேடும் பணிகள் தொடர்ந்துநடைபெற்று வருகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



