களுத்துறை கடற்கரையில் தாய் மற்றும் மகளின் சடங்கள் மீட்பு
வடக்கு களுத்துறை கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் தொடங்கொட பிரதேசத்தில் வசிக்கும் தாய் மற்றும் மகளின் சடலங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
நேற்று (27) பிற்பகல் வடக்கு களுத்துறை கடற்கரையில் சிறுமி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், இன்று காலை அதே கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் வீசப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதுஇ உயிரிழந்த சிறுமியும் பெண்ணும் தொடங்கொட ஹல்கடவில பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய தாய் மற்றும் அவரது 02 வயது மகள் என அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றது தெரியவந்தது.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இது தற்கொலையா அல்லது கொலையா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.