மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியை தாண்டியுள்ளது
#India
#world_news
#government
#Tamilnews
#River
Mani
1 year ago

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்கு அமைந்துள்ள அணைகளில் நீர்மட்டம் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து, கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12,444 கனஅடியாக தற்போது 15,000 கனஅடியை தாண்டியுள்ளது. அணைக்கு நீர்வரத்து மாலை 4 மணியளவில் வினாடிக்கு 15,232 கன அடியாக அதிகரித்தது.



