அருணாச்சல பிரதேசத்தில் திடீரென நிலநடுக்கம் 4.0 ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவு
#India
#Delhi
#Earthquake
#2023
#Tamilnews
Mani
1 year ago

இன்று காலை அருணாச்சல பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தில் உள்ள பாங்கின் நகரில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 8.50 மணியளவில் பாங்கின் நகரின் வடக்கு-வடமேற்கு திசையில் 221 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.



