குவைத்தில் வீசா இன்றி தங்கியிருந்த 62 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
#SriLanka
#Lanka4
#Tamilnews
Kanimoli
2 years ago
குவைத்தில் வீசா இன்றி தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த 62 வீட்டுப் பணியாளர்கள் அங்குள்ள இலங்கை தூதரகத்தினால் தற்காலிக விமான அனுமதியுடன் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் 59 பேர் பெண்கள், ஏனைய 3 பேர் ஆண்களும் இன்று (28) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். குவைத்தில் வீடுகளில் வேலைக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட வீடுகளை விட்டு வெளியேறி,
அங்கு தற்காலிக தங்கும் விடுதிகளில் தங்கி, மாதச் சம்பளத்துக்கு பல்வேறு பணியிடங்களில் பணிபுரியும் இலங்கையர்கள் குழுவே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் என குவைத் நாட்டுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்தார்.