மன்னார் மாவட்டத்திலுள்ள இரண்டு பாடசாலைகளுக்கு விற்றமின் மருந்து நன்கொடை

#SriLanka #Mannar #School #Lanka4 #இலங்கை #லங்கா4 #விற்றமின் #vitamin
மன்னார் மாவட்டத்திலுள்ள இரண்டு பாடசாலைகளுக்கு விற்றமின் மருந்து நன்கொடை

இலங்கையைச் சேர்ந்த நோர்வேயில் வசித்து வரும் வைத்திய கலாநிதியொருவரால் மன்னார் மாவட்டம் குஞ்சுக்குளம் பகுதியில் உள்ள இரண்டு பாடசாலையைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்களுக்கு விற்றமின் மருந்துகள் வழங்கி அவர்களது போசாக்கை மேம்படுத்த உதவியுள்ளார்.

 இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சென்று நோர்வே நாட்டில் வசித்து வருகின்ற வைத்திய கலாநிதி எட்வெட் எல்மர் தனது குடும்பத்துடன் இலங்கைக்கு வருகை தந்த நிலையில் குறித்த மனிதாபிமான பணியை முன்னெடுத்துள்ளார்.

 குறித்த பின் தங்கிய கிராமத்தில் உள்ள குறித்த இரு பாடசாலைகளுக்குச் சென்று மாணவர்களுக்கான உடல் பரிசோதனை மேற்கொண்டதோடு அவர்களுக்கு தேவையான விற்றமீன் அடங்கிய மருந்துகளை வழங்கி வைத்துள்ளார்.

இந்நிகழ்வில் மடு வைத்திய அதிகாரிகள் வைத்தியர் டெனி மற்றும் ஞா.குணசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!