சீனா பாகிஸ்தானுக்கு ரூ.19600 கோடி கடன் உதவி!
#China
#world_news
#Pakistan
#Tamilnews
#money
#Breakingnews
#ImportantNews
#Finance
Mani
2 years ago

பாகிஸ்தான் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது, அதன் அந்நிய செலாவணி கையிருப்பு வேகமாக குறைந்து வருகிறது. இந்த கடினமான சூழ்நிலையில் உதவ, பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனா, அந்நாட்டிற்கு 2.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை ( தோராயமாக ரூ. 19,600 கோடி ) கடனாக வழங்கியுள்ளது.
அடுத்த 2 நிதியாண்டுகளில் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையில் கீழ் சீனா இந்த கடனை வழங்கியுள்ளதாக பாகிஸ்தான் நிதி மந்திரி இஷாக் தர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த 2 ஆண்டுகளிலும் காலகட்டத்தில் கடனுக்கான வட்டியை செலுத்துவதற்கு பாகிஸ்தானே பொறுப்பாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



