பிலிப்பைன்சில் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 26 பேர் பலி

#Accident #world_news #Lanka4
Kanimoli
2 years ago
பிலிப்பைன்சில் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 26 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டின் பினன்ஹொன் நகரில் இருந்து ஏரி வழியாக தலிம் தீவிற்கு பயணிகள் படகு பயணம் மேற்கொண்டது. படகில் 70 பயணிகள் பயணித்தனர். ஏரியில் படகு சென்றுகொண்டிருந்தபோது திடீரென பலத்த காற்றுடன், கனமழை பெய்துள்ளது. இதனால், பயணிகள் அனைவரும் படகின் ஒரு பக்கத்தில் குவிந்துள்ளனர். 

இதனால், ஒரு பக்கத்தில் எடை அதிகரித்ததால் நிலை தடுமாறிய படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பயணிகள் அனைவரும் ஏரியில் மூழ்கினர்.இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனால், இந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர்.

 இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் 42 பேர் பயணிக்கக்கூடிய படகில் 70 பேர் பயணித்ததும், பயணிகள் யாரும் உயிர்காக்கும் கவச உடை (லைப் ஜாக்கெட்) அணியவில்லை என்பதும் தெரியந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!