வீட்டு கூரைகளில் சூரிய மின் தகடுகளை பொருத்த நடவடிக்கை!

#SriLanka #Sri Lanka President #Power #Hydropower
Mayoorikka
2 years ago
வீட்டு கூரைகளில் சூரிய மின் தகடுகளை பொருத்த நடவடிக்கை!

வீடுகளின் கூரைகளில் சூரிய மின் தகடுகளை பொருத்தும் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக மின் மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

 முதற்கட்டமாக இதற்காக கிராமப்புறங்களில் 25 ஆயிரம் வீடுகளை நிர்மாணித்து அந்த வீடுகளின் கூரைகளில் சூரிய மின் தகடுகளை நிறுவும் திட்டத்தை ஆரம்பிக்க எதிர்ப்பார்பதாக அவர் சுட்டிக்காட்டினார். 

 வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

 அதேநேரம் குறித்த சூரிய மின் தகடுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரமும் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 தனது ட்விட்டர் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!