நீதிமன்றத்திற்குள் வழக்கு ஆவணங்களை மென்று அழித்ததற்காக பெண் வழக்கறிஞர் கைது

#SriLanka
Prathees
2 years ago
நீதிமன்றத்திற்குள் வழக்கு ஆவணங்களை மென்று அழித்ததற்காக பெண் வழக்கறிஞர் கைது

கெக்கிராவ மாவட்ட நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள காணி வழக்கு தொடர்பில் ஆவண காப்பகத்தில் இருந்த ஆவணங்களின் இரண்டு பிரதிகளை கிழித்து அழித்ததாக கூறப்படும் பெண் சட்டத்தரணி ஒருவரை கெக்கிராவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 கெக்கிராவ மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றப் பதிவேட்டில் காணி வழக்கு தொடர்பான கோப்பிலிருந்து இரண்டு ஆவணங்களைக் கிழித்து நீதிமன்றத்திற்குள் மென்று அழித்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 காப்பகத்தில் கடமையாற்றிய நீதிமன்ற அதிகாரிகள் நீதிமன்ற பதிவாளருக்கு அறிவித்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 அப்போது நீதிமன்றத்தில் கடமையாற்றியிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேகமடைந்த சட்டத்தரணியை பரிசோதித்தபோது, அவர் மென்று அழித்த ஆவணங்களில் சில துண்டுகள் கிடைத்துள்ளன.

 குறித்த சட்டத்தரணி கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் நாளை ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!