சட்டவிரோத இறைச்சிக் கூடத்தை நடத்தி வந்த மாணிக்க வியாபாரி உட்பட மூவர் கைது

#SriLanka #Arrest #Police
Prathees
2 years ago
சட்டவிரோத இறைச்சிக் கூடத்தை நடத்தி வந்த மாணிக்க வியாபாரி உட்பட மூவர் கைது

வெலிப்பன்ன பிரதேசத்தில் பாரியளவில் கோடீஸ்வர மாணிக்க வியாபாரி ஒருவரால் நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத இறைச்சிக் கூடத்தை வலான ஊழல் ஒழிப்புப் பிரிவினர் நேற்று முன்தினம் (26) அதிகாலை சுற்றிவளைத்து மாணிக்கக்கல் வர்த்தகர் உட்பட மூவரைக் கைது செய்துள்ளனர்.

 திருடப்பட்ட 13 எருமை மாடுகள் வெட்டுவதற்காக தயார் செய்யப்பட்டுள்ளதுடன், அந்த விலங்குகளும் காவல்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.

 கைது செய்யப்பட்ட கோடீஸ்வர மாணிக்க வியாபாரியை காப்பாற்றுமாறு முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் இணைப்புச் செயலாளர் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கடும் அழுத்தங்களை கொடுத்துள்ளார்.

 அந்த அழுத்தங்களுக்கு முகம் கொடுக்காத பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 3 இலட்சம் ரூபாவை லஞ்சமாக கொடுத்து தப்பிக்க வர்த்தகர் கடுமையாக முயற்சித்த போதும் அதுவும் தோல்வியில் முடிந்தது.

 பொலிஸில் செல்வாக்கு செலுத்திய முன்னாள் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் திருகோணமலையைச் சேர்ந்த அரசியல்வாதி எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 பாணந்துறை வலன ஊழல் ஒழிப்பு பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் இந்திக்க வீரசிங்கவிற்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நேற்று முன்தினம் அதிகாலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 வெலிப்பன்ன பொலிஸ் நிலையத்திலிருந்து 800 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள இந்த போலி மாட்டு இறைச்சி கூடம் சில பொலிஸ் அதிகாரிகளின் ஆசியுடன் நீண்டகாலமாக இயங்கி வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 இந்த இறைச்சி கூடத்தை நடத்தி வந்த முஸ்லிம் மாணிக்க வியாபாரி, திஸ்ஸமஹாராம, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் மாடுகளை திருடி தெற்கு நெடுஞ்சாலைகளில் கொண்டு சென்று வெலிப்பன்ன இறைச்சி கூடத்திற்கு கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட குழுவொன்றை பயன்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 அரசியல்வாதிகள் மற்றும் சில உயர் பொலி அதிகாரிகளுடன் நெருங்கிய உறவைப் பேணிக் கொண்டு அவர் நீண்டகாலமாக இந்தக் கொள்ளையை நடத்தி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!