விமான நிலையத்தில் 21 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: 7பேர் கைது
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று 21 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொகையை கைப்பற்றியுள்ளது.
ஒரு தொகை செயற்கை கஞ்சா மற்றும் செயற்கை ஆம்பெடமைன் போதைப்பொருள் கைது செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 07 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹொங்கொங்கில் இருந்து டுபாய் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சரக்கு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஏர் கார்கோ பிரிவில் இந்த சரக்குகளை ஏற்றிச் செல்வதற்காக மூவர் வந்த போது, அவர்களுக்கு முன்னால் இந்த பார்சல் திறக்கப்பட்டுள்ளது.
அங்கு சுமார் 33 கிலோ எடையுள்ள சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான செயற்கை கஞ்சா கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களிடம் இருந்து கிடைத்த மேலதிக தகவலின் அடிப்படையில் கொழும்பு புறக்கோட்டை பிரதேசத்தில் இயங்கி வரும் "சவுண்ட் வாஸ்குலர்" சிஸ்டம் விற்பனை செய்யும் கடையொன்றில் இருந்து சுமார் 20 கோடி ரூபா பெறுமதியான சுமார் 100 கிலோகிராம் செயற்கை ஆம்பெடமைன் பவுடடர் கண்டுபிடிக்கப்பட்டது.
இதேவேளை, கொழும்பு பத்தரமுல்ல பிரதேசத்தில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட ரஷ்ய பிரஜை உட்பட மேலும் மூவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கொழும்பு மற்றும் நகர்ப்புறங்களில் நடக்கும் "பார்ட்டிகளின்" போது இந்த செயற்கை போதைப்பொருள் தூள் பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவு பெற்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.