இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சமூகத்தின் ஏற்பாட்டில் சிறு போக அறுவடைவிழா
#SriLanka
#Kilinochchi
#Lanka4
#River
Kanimoli
2 years ago
இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சமூகத்தின் ஏற்பாட்டில் சிறு போக அறுவடைவிழா இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான நீர்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடு குளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன் அறுபடை விழா இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் பன்னங்கண்டி பகுதியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், விவசாயத்திணைக்களம் மற்றும் நீர்பாசனத்திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.