கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தின் புதிய நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கம்
அமைச்சர் தனது அடிப்படைக் கடமைகளை புறக்கணித்துள்ளதால், அவரது பொறுப்பற்ற செயலால் மக்கள் உயிரை பணயம் வைத்து இழப்பீடாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக இனி அவரின் பணித்திறன் மீது நம்பிக்கை இல்லை என நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் எனவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரிடம் சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தின் புதிய நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த பிரேரணை எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரஞ்சித் மத்தும பண்டார சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல, ராஜித சேனாரத்ன, குமார வெல்கம, சந்திம வீரக்கொடி, எம்.எஸ். தௌபிக், இம்ரான் மஹ்ரூப், ஹேஷா விதானகே, செல்வராஜா கஜேந்திரன், சமிந்த விஜேசிறி, எஸ். வேலு குமார், கயந்த கருணாதிலக்க, அசோக் அபேசிங்க, கபீர் ஹாசிம், காவிந்த ஜயவர்தன, துஷார இந்துனில் அமரசேன, கின்ஸ் நெல்சன், வருண லியனகே, பாட்டலி சம்பிக்க ரணவக்க, டபிள்யூ.எச்.எம். தர்மசேன, வி. ராதாகிருஷ்ணன், எஸ்.எம். மரிக்கார், ஹர்ஷன ராஜகருணா, வசந்த யாப்பா பண்டார, ஈரான் விக்கிரமரத்ன, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, நிரோஷன் பெரேரா, புத்திக பத்திரன, ஜே.சி. அலவத்துவல, ஜயரத்ன ஹேரத், சுஜித் சஞ்சய் பெரேரா, நளீன் பண்டார ஜயமஹா, திலீப் வெதஆராச்சி, தலதா அத்துகோரள, இஷாக் ரஹ்மான், அஜித் மான்னப்பெரும, ஹெக்டர் அப்புஹாமி, மயந்த திஸாநாயக்க, ரோஹன பண்டார, மனோ கணேசன், விஜித ஹேரத், எம். உதய குமார், கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் தீர்மானத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.