பாடசாலை மாணவர்களுக்கான பை மற்றும் காலணிகளின் விலையை குறைக்க தீர்மானம்!
#SriLanka
#Lanka4
#students
#Ranjith Siambalapitiya
Thamilini
2 years ago
பாடசாலை மாணவர்களின் காலணிகள் மற்றும் பைகளின் விலையை 10 சதவீதத்தால், குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை காலணிகள் மற்றும் பைகள் உற்பத்தியாளர்களுடன் இன்று (27.07) நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கலந்துரையாடியிருந்த நிலையில், இதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த தொழில் அதிபர்கள், தற்போது சந்தையில் உள்ள பங்குகளும் புதிய விலை திருத்தத்தின் கீழ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதன்படி, பாடசாலை மாணவர்களுக்கு நன்மை வழங்கிய தொழிலதிபர்களுக்கும் அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.