உலக சந்தையில் கோதுமை மாவின் விலை 15 வீதத்தால் அதிகரிப்பு!
உலக சந்தையில் கோதுமை மாவின் விலை 15 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைன் - ரஷ்யாவிற்கு இடையிலான போர் ஒரு வருடங்களை கடந்து தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்த போரினால் உலக பொருளாதாரம் கடுமையான சரிவை கண்டுள்ளது. இதற்கிடையே தற்போது கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை நீட்டிக்க ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது.
ரஷ்யா மீது மேற்குலக நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், இந்த தடைகள் காரணமாக ரஷ்யாவின் பொருளாதாரதம் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
இந்த தடைகளை நீக்கும் பட்சத்தில் கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை நீட்டிக்க முடியும் என ரஷ்யா கூறிவருகிறது. ரஷ்யாவின் இந்த கோரிக்கைக்கு மேற்குலக நாடுகள் மறுப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை ரஷ்யா நிறுத்திவைத்துள்ளது.
இதனால் சர்வதேச சந்தையின் கோதுமை மாவின் விலை 15 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அத்துடன் சர்வதேச சந்தைகளில் கோதுமை மாவிற்கு பற்றாக்குறை அல்லது தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அச்சம் எழுந்துள்ளது.