ஆன்மீகவாதி ஒருவருக்கு சிறை தண்டனை விதிப்பு!
சிறார் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரண்டு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ஆன்மீகவாதி ஒருவருக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று (27.06) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்ததுடன், குற்றம் சாட்டப்பட்டவர் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மூன்று குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து குற்றவாளிக்கு, 18 மாத கடூழியச் சிறைத்தண்டனையும், 05 வருடங்களுக்கு இடைநிறுத்தவும் உத்தரவிட்டார்.
அதுமட்டுமின்றி, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பிரதிவாதிக்கு 3,000 ரூபா அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.