மருத்துவ அதிகாரிகளின் தரவுகளை உறுதி செய்ய கைவிரல் அடையாளம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

#SriLanka #Letters #Lanka4 #Health Department
Kanimoli
2 years ago
மருத்துவ அதிகாரிகளின்  தரவுகளை உறுதி செய்ய கைவிரல் அடையாளம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

சுகாதார அமைச்சின் மருத்துவ நிர்வாக சேவை அதிகாரிகள் உள்ளிட்ட சில நிறைவேற்றுப்பிரிவு அதிகாரிகளின் அலுவலக வருகை மற்றும் வெளியேறும் தரவுகளை உறுதிப்படுத்திக்கொள்ள கைவிரல் அடையாளம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் செயல்படுத்தப்படும் கட்டாய நடைமுறை தொடர்பில் சுகாதார அமைச்சின் நிர்வாகப்பிரிவின் மேலதிக செயலாளர் கீதாமணி சீ கருணாரத்னவின் கையொப்பத்துடன் இதற்கான அறிவித்தல் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 மேலும், மருத்துவ நிர்வாக சேவை அதிகாரிகள் மற்றும் ஏனைய நிறைவேற்று தர அதிகாரிகள் கைரேகை இயந்திரங்களை பயன்படுத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் பிரசாத் கொழம்பகே தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!