போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
உலகின் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியில் கொழும்பு நகரம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
இது தொடர்பான தகவலை World Of Statistics அமைப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி, உலகிலேயே மிக மோசமான போக்குவரத்து நகரங்களை கொண்ட நாடுகளின் வரிசையில், முதல் இடத்தை நைஜீரியாவின் லாகோஸ் நகரமும், இரண்டாவது இடத்தை, லொஸ் ஏங்சல்ஸ் நகரமும், மூன்றாவது, இடத்தில், சான் ஜோஸ் நகரமும் இடம்பிடித்துள்ளது.
உலகிலேயே போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில் கொழும்பு நான்காவது இடத்தில் உள்ளது.
ஐந்தாவது இடத்தில் இந்தியாவின் டெல்லி நகரம் உள்ளது.