கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பு முயற்சி; பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது
#SriLanka
#Jaffna
#Gajendrakumar Ponnambalam
#Lanka4
Kanimoli
2 years ago
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு,மருதங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் செம்பியன்பற்று வடக்கு பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணிகளை இலங்கை கடற்படையினருக்கு நிரந்தரமாகவே சுவீகரிக்கும் நோக்குடன் தொடர்ந்து நாளாக நாளாக இன்று (27) காணி அளவீட்டு முயற்சி இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியைச் சேர்ந்த தனியாருக்குச் சொந்தமான 15 பேர்ச் (ஒன்றரை பரப்பு) காணியை இலங்கை கடற்படையினருக்கு நிரந்தரமாக சுவீகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட இருந்த காணி அளவீட்டு பணி மக்கள் எதிர்ப்பால் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
இதன்போது பிரதேச மக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.