சவூதி அரேபியாவிடம் மன்னிப்புக் கோரிய இலங்கை

#SriLanka
Mayoorikka
2 years ago
சவூதி அரேபியாவிடம் மன்னிப்புக் கோரிய இலங்கை

இலங்கைக்கு விஜயம் செய்த சவூதி அரேபிய தூதுக் குழுவினரை அவமதிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டமை தொடர்பில் சவுதியிடம் இலங்கை மன்னிப்புக் கோரியுள்ளது.

 தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் சவுதி அரேபிய தூதுக் குழுவினரை அவமதிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தார்.

 3 பேர் கொண்ட சவூதி தூதுக் குழுவிர், அந்தநாட்டில் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள பெருமளவிலான மரங்களை நடும் திட்டத்திற்கு இலங்கையின் பயிரிடல் தொடர்பான அறிவினை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை வந்திருந்தனர்.

 இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் சவூதி அரேபியாவிற்கான தென்னையை ஏற்றுமதி செய்து சில வருடங்களில் சுமார் 10 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வருமானமாக ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரி, சம்மந்தப்பட்ட சவூதி இராஜதந்திரிகளை கண்காணிப்பு பணிகளுக்கு அழைத்து செல்லவில்லை என நேற்று ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!