வவுனியாவில் சீனித் தொழிற்சாலை: எதுவும் தெரியாது! கையை விரித்த ஆளுநர்
#SriLanka
#Sri Lanka President
#Vavuniya
#Governor
Mayoorikka
2 years ago
வவுனியாவில் சீனித் தொழிற்சாலைக்கு காணி வழங்குவது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் ஆளுனரின் இணைப்பு அலுவகத்தை திறந்து வைத்த பின் ஊடகவியலாளர்கள் 'சீனித் தொழிற்சாலைக்கு வவுனியாவில் காணி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது' இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன என கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியாவில் சீனித் தொழிற்சாலைக்கு காணி கொடுப்பது தொடர்பில் எனக்கு தெரியாது.
இது சம்மந்தமாக ஊடகங்களுக்கு மறைக்க வேண்டிய தேவை இல்லை. உண்மையில் இது தொடர்பில் எனக்கு தெரியாது எனத் தெரிவித்தார்.