தமிழ் பொலிஸ் தேவை இல்லை! சர்வகட்சி மாநாட்டிற்கு பின்னர் சுரேன் ராகவன் கருத்து

#SriLanka #Sri Lanka President
Mayoorikka
2 years ago
தமிழ் பொலிஸ் தேவை இல்லை! சர்வகட்சி மாநாட்டிற்கு பின்னர் சுரேன் ராகவன் கருத்து

சர்வகட்சி மாநாட்டில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார்.

 சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்ட நிலையில், சுரேன் ராகவன் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

 “இங்கே கடைசியாக நடந்தது தமிழ் கட்சிகளுக்கிடையில் என்ன செய்ய வேண்டும் என்பதில் ஒருமித்த முடிவு இல்லை. எம்.பி.சுமந்திரன், எம்.பி.விக்னேஸ்வரன் மற்றும் ஏனையவர்கள் மத்தியில் இதற்கு மேல் அதிக அதிகாரம் தேவையா?எங்களுக்கு 13 போதுமா? எங்களுக்கு தேர்தல் வேண்டுமா என்ற கருத்துக்கள் காணப்பட்டன.

 அவர்களே அந்தப் பிரச்சினையை தீர்க்க வேண்டும். சகோதரத்துவத்தை கட்டியெழுப்ப வேண்டுமானால் ஒற்றுமை தேவை. பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும். 

வடக்கில் போன்று தெற்கிலும் பல பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றன. அடுத்த மாதம் மீண்டும் சந்திப்போம் என்று நினைக்கிறேன். இன்னும் தெளிவான மற்றும் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு வரலாம் என்பதே எனது நிலைப்பாடு. 

நான் ஆளுநராக இருந்த காலத்திலும் இதனை கூறினேன். தமிழ் பொலிஸ் தேவை இல்லை. தற்போதுள்ள பொலிஸில் தமிழர்களை நியமிக்கவும் என்றார்.

  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!