ஹர்த்தாலுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு!
#SriLanka
#Sri Lanka President
#Protest
Mayoorikka
2 years ago
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி விவகாரத்திற்கு நீதிக்கோரியும், சர்வதேச நிபுணர்களின் கண்காணிப்பு அவசியம் என வலியுறுத்தியும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவினை அறிவித்து வருகின்றனர்.
இந்த நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு தமது முழு ஆதரவையும் வழங்கவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முழுமையான நிர்வாக முடக்கல் போராட்டத்தை முன்னெடுக்கப்பதற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் அழைப்பு விடுத்தது.