இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்
#SriLanka
#France
#Lanka4
#President
Kanimoli
2 years ago
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இந்த வார இறுதியில் பப்புவா நியூ கினியாவில் இருந்து நாடு திரும்பும் போது இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரான்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தனது குறுகிய கால பயணத்தின் போது சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.
இலங்கையின் கடனை மறுசீரமைப்பதை ஒருங்கிணைக்க இருதரப்பு கடன் வழங்குநர்களிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பொதுவான தளத்தை அறிவித்த குழு நாடுகளில் பிரான்ஸ் உள்ளது.
குழுவில் உள்ள மற்ற நாடுகள் ஜப்பான் மற்றும் இந்தியா ஆகும்.