9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! இந்தியா வானிலை மையம் எச்சரிக்கை

#India #Rain #HeavyRain #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!  இந்தியா வானிலை மையம் எச்சரிக்கை

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவமழையின் விளைவாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, இதன் விளைவாக ஏராளமான சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் நீர்ப்பாசனத்திற்கு தேவையான தண்ணீர் விநியோகம் ஆகியவை பாதிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி வருவாய் துறை மந்திரி ஜெகத் சிங் நேகி கூறும்போது, ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. 188 பேர் உயிரிழந்தனர். 194 பேர் காயமடைந்தனர். 652 வீடுகள் சேதமடைந்து உள்ளன. இதுதவிர, 6500 வீடுகள் பகுதியளவு பாதிக்கப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.

இந்நிலையில், சிம்லா, சோலன், சிர்மவுர், மண்டி, பிலாஸ்பூர், காங்ரா, சம்பா, ஹமீர்பூர் மற்றும் உனா ஆகிய 9 மாவட்டங்களுக்கு வரும் மூன்று நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத் தலைவர் சுரேந்தர் பால் தெரிவித்துள்ளார்.

கடந்த 100 ஆண்டுகளின் பதிவுகளை பார்க்கும் போது நடப்பு ஆண்டில் அதிக மழைப்பொழிவு உள்ளதாகவும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!