மெக்சிகோவில் 7,200 மெஸ்கால் என்ற திரவ பாட்டில்கள் ஏற்றப்பட்ட கப்பல் கண்டுப்பிடிப்பு!

7,200 மெஸ்கால் என்ற திரவ பாட்டில்கள் ஏற்றப்பட்ட ஒரு கப்பல் கொள்கலனைக் மெக்சிகன் கடற்படையில் பணிபுரியும் சுங்கக் காவலர்கள் கண்டுப்பிடித்துள்ளதாக கூறியுள்ளனர்.
மான்சானிலோவின் பசிபிக் கடற்கரை துறைமுகத்தில் லைபீரியக் கொடியுடன் கூடிய கப்பலில் குறித்த திரவ பாட்டில்கள் கண்டுப்பிடித்துள்ளதாக கூறினர்.
கப்பல் ஆவணங்களின்படி, கொள்கலன் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கப்பலில், 9.5 டன் மதுபான திரவ பாட்டில்கள் இருந்ததாக கடற்படையினர் தெரிவித்தனர்,
இருப்பினும் மருந்துகளின் எடை கணிசமாக குறைவாக இருந்திருக்கும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மெக்சிகோ கடற்படையினர் நாடு முழுவதும் 124 டன் மெத்தை கைப்பற்றியுள்ளனர்.
சர்வதேச வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தும் மெக்சிகன் கார்டெல்கள், ஆஸ்திரேலியாவிற்கு அல்லது திரவ வடிவில் போதைப்பொருட்களை கடத்த முயற்சிப்பது இது முதல் முறை அல்ல எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.



