முன்னாள் ஜனாதிபதிகள் 7 பேரும் 13ஐ அமுல்படுத்தவில்லை - சாகர காரியவசம்

#SriLanka #Lanka4 #srilankan politics
Kanimoli
2 years ago
முன்னாள் ஜனாதிபதிகள் 7 பேரும் 13ஐ அமுல்படுத்தவில்லை - சாகர காரியவசம்

முன்னாள் ஜனாதிபதிகள் 7 பேரும் 13ஐ அமுல்படுத்தவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரவுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். 13ஐ அமுல்படுத்துவது நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்துவதால், மகா சங்கத்தினர் மற்றும் பல்வேறு தரப்பு மக்களுடன் கலந்துரையாடிய பின்னரே இதனை மேற்கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

 இந்த நாடு பிரிவினைவாதிகளின் சதியில் இருந்து தலைதூக்கிய ஒரு நாடு. மீண்டும் இங்கு பிரிவினைவாதங்களால் நாடு பிளவுபட நாம் ஒரு போதும் இடமளிக்கக் கூடாது என்றும், இதற்கு முன்னர் வந்த ஜனாதிபதி கூட நல்லிணக்கத்தினை முன்வைத்து பிரச்சாரம் செய்த ஒருவர், அவர் கூட 13 குறித்து அவரது காலத்தில் எந்தத் தீர்மானத்தினையும் எடுக்கவில்லை என்றால் அது குறித்து நாம் சிந்திக்க வேண்டும் என்றும் சாகர காரியவசம் தெரிவித்திருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!