மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜரை தனது கட்டுப்பாட்டிற்குள் எடுத்த இராணுவத்தினர்!
#world_news
#Lanka4
Dhushanthini K
2 years ago

மேற்கு ஆபிரிக்க நாடானா நைஜரின் ஜனாதிபதி மொஹமட் பாஸூம் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நைஜரில் நடைபெற்ற தேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இது சம்பந்தமான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்புச் சூழல் சீர்குலைந்து வருவதாலும், மோசமான நிர்வாகத்தாலும், அவரது ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர முடிவு செய்ததாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் 2020ஆம் ஆண்டுக்கு பிறகு மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் நடக்கும் 7வது ராணுவ சதிப்புரட்சி இது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



