இலங்கையில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கையில் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட விசேட வைத்தியர் இஷானி பெர்னாண்டோ இந்த விடயத்தை கூறினார்.
மேலும் தெரிவித்த அவர், இலங்கையில் ஏற்படும் மரணங்களுக்கு இரண்டாவது பொதுவான காரணியாக புற்றுநோய் உள்ளது எனக் கூறினார்.
"இலங்கையில் மரணத்திற்கு இரண்டாவது முக்கிய காரணம் புற்றுநோய். 2019 ஆம் ஆண்டில் 15,599 பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர். 2020 இல், 37,649 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், புற்றுநோயில் பாரிய அதிகரிப்பை நாம் காண்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆண்களிடையே முக்கிய புற்றுநோயானது வாய் புற்றுநோயாகும். நான் அறிந்தவரையில் இது போன்ற திட்டங்கள் குறைவாகவே உள்ளன. இது வயதுக்கு ஏற்ப உருவாகிறது. இது மக்களைக் கொல்வதில்லை. நம் நாட்டில் புகையிலைக்கு எதிராக அதிக வேலைகளைச் செய்ய வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.