கொழும்புத்துறைமீனவர்கள் வலைகளை பிடுங்கி அகற்றியுள்ள நீரியல்வளத்துறை உதவிப் பணிப்பாளர்
#SriLanka
#Jaffna
#Fisherman
#Lanka4
Kanimoli
2 years ago
யாழ்ப்பாணம் மாவட்ட குருநகர், பாசையூர், கொழும்புத்துறை பகுதி மீனவர்கள் பாரம்பரியமாக 150 வருடங்களைத் தாண்டி மேற்கொண்டுவரும் சிறகுவலைத் தொழில்களை வலைகளை கிளிநொச்சி மாவட்ட நீரியல்வளத்துறை திணைக்கள உதவிப் பணிப்பாளர் பிடுங்கி அகற்றியுள்ளார்.
இதனை குறித்த மீனவர்கள் சென்று வினவியபோது அனுமதியைப் பெற்று மேற்கொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கான அனுமதி பெறுவதற்கு பல மாதங்களாகும் அதுவரை எமது வாழ்வாதாரம் பாதிக்கப்படும், எமது பிள்ளைகளின் கல்வி பாதிப்படையும் எனவே அதுவரை எமக்கு மன்னிப்பளித்து இவ் தொழிலை மேற்கொள்ள அனுமதிக்குமாறு கோரியுள்ளனர்.
இதற்காக ஒன்றுகூடிய கடற்றொழிலாளர்கள் யாழ்- பாசையூர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தில் ஊடக சந்திப்பையும்்மேற்கொண்டனர்.