கடமை தவறிய பொலிஸ் சார்ஜன்ட் விளக்கமறியலில்

#SriLanka #Police #Prison
Prathees
2 years ago
கடமை தவறிய பொலிஸ் சார்ஜன்ட் விளக்கமறியலில்

ரம்புக்ன பொலிஸ் பிரிவின் சார்ஜன்ட் ஒருவர் அனுமதியின்றி இரவு நேரத்தில் வீடொன்றுக்குள் நுழைந்துள்ளார் அந்த வீட்டின் உதவியாளர் குறித்த பொலிஸ் சார்ஜன்ட்டை மரத்தில் கட்டியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 ரம்புக்கனை பொலிஸ் குழுவொன்று சம்பவம் இடம்பெற்றதை அடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று இந்த சார்ஜன்ட் மற்றும் ஒரு பெண்ணிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. 

 சார்ஜன்ட் கேகாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். 

 இந்த பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் இரண்டு அதிகாரிகள் கடந்த 24 இரவு பொலிஸ் வாகனத்தில் நடமாடும் உத்தியோகபூர்வ விஜயத்திற்கு சென்றுள்ளனர். 

 செல்லும் வழியில் இந்த வாகனத்தில் இருந்து இறங்கிய சார்ஜென்ட், தன்னுடன் வந்த அதிகாரிகளிடம், 'நான் போய் சாப்பாடு சாப்பிட்டு வருகிறேன்' என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். 

 எனினும் சிறிது நேரத்தின் பின்னர் ரம்புக்கனை பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகர் மகேஷ் விஜேசிறி உள்ளிட்ட பொலிஸ் குழுவொன்று ரம்புக்கனை உலகம பராத்தே கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தது. 60 வயதான பெண் ஒருவர் பொலிஸாரிடம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 

 இச்சம்பவத்தை நன்கு புரிந்து கொண்ட பொலிஸ் பரிசோதகர் மரத்தில் கட்டப்பட்டிருந்த சார்ஜன்டை அவிழ்த்து கைது செய்து கேகாலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினார்.

 பொலிஸ் கடமை என்ற போர்வையில் வீடொன்றிற்குள் பதுங்கி வேறு கடமையைச் செய்யச் சென்றதன் காரணமாகவே இந்தச் சார்ஜன்ட் இந்தச் சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!